1. Blogs

கொரோனா பாதிப்பு இல்லாத மூலிகை கிராமம்- தமிழகத்தின் பெருமை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Corona-free herb village - the pride of Tamil Nadu!

தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனா வைரஸ் தொற்று என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் மக்கள் வசித்து வருவது மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாக் கோரத்தாண்டவம் (Corona claim)

உலக நாடுகளை உலுக்கியது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தமது 2-வது அலையை விஸ்தரிக்கவிட்டுக் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கொரோனா.

கொரோனா இல்லா கிராமம்

ஆனால், தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு என்பதன் அறிகுறியேத் தென்படாத கிராமம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த கிராமத்தின் பெயர் வெள்ளகவி கிராமம்.

சுயக்கட்டுப்பாடு (Self-control)

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் அருகே இந்த கிராமம் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவ ஆரம்பித்த நாள் முதலே சுயக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்ததுதான், இந்த கிராம மக்களின் வெற்றிக்குக் காரணம்.

வரவும், செல்லவும் அனுமதி மறுப்பு (Denial of permission to come and go)

அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதலே, முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும், தாங்களும் வெளியூர்களுக்குச் செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருகின்றனர்.

கொடைக்கானலுக்கு அடிப்படை (Basic for Kodaikanal)

உண்மையில், கொடைக்கானல் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது இந்த வெள்ளகவி கிராமம்தான்.

400 ஆண்டுகள் பழமையானது (400 years old)

மூலிகை வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமமானது, சுமார் 400 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு 150 குடும்பங்களும் 400க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.

சாலைவசதி கிடையாது (There is no road)

இந்த கிராமத்திற்குச் செல்வதற்கு சாலைவசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து 6 கி.மீ தூரம் கரடு முரடான ஒத்தையடி பாதையில் அடர்ந்த வன பகுதிக்கு நடுவே நடந்து தான் செல்ல முடியும்.

நடக்க வேண்டியது கட்டாயம் (Must walk)

மேலும் வெள்ளகவி கிராமத்திலிருந்து கும்பக்கரை அருவி வழியாகப் பெரியகுளம் செல்வதற்கும் 6 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள வெள்ளகவி கிராம மக்களின் முக்கியத் தொழில் விவசாயம்.

தலை சுமை வாழ்க்கை (Head load life)

இங்கு ஏலக்காய், காபி, அவக்கோடா, மிளகு உள்ளிட்ட மலைப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கும் விளைபொருட்களை தலை சுமையாகவும், குதிரை மூலம் கொண்டு சென்று விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

கொரோனா அச்சம் இல்லை (No Corona fear)

மேலும் கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பலரும் இறந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொரோனா தொற்று என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எனவும் எங்களது கிராமத்தில் கொரோனா அச்சம் என்பது துளி கூட இல்லை என கூறுகின்றனர் கிராமமக்கள்.

மூலிகை கிராமம் (Herbal Village)

இது குறித்து கிராமவாசிகள் கூறுகையில்,

  • இதுவரை சளி, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் கைவைத்தியம் செய்து கொள்கிறோம்.

  • இங்கு விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளை அதிகம் உண்பதாலும், மூலிகை வனப்பகுதிக்கு நடுவே இக்கிராமம் அமைந்துள்ளதால் நோய் தொற்று இல்லாமல் வாழ்கிறோம்.

  • மேலும் முகக்கவசம் இல்லாமலும் வழக்கம் போல் அன்றாடப் பணிகளை செய்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் (Tourists)

இங்கு மலையேற்றப் பயணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த கிராமத்தில் தங்கிச் செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாள் முதலே முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும், தாங்களும் வெளியூர்களுக்கு செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

காலணிகள் கூடாது (Shoes should not)

இந்த கிராமத்தைச் சுற்றி 24 தெய்வங்கள் இருப்பதால் காலணிகளை அணியாமல் தெய்வங்களுக்கு பயந்து வெறும் கால்களில் ஊருக்குள் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர்.

ஊர்க்கட்டுப்பாடு

  • வெளியூர் மக்களையும் காலணி அணியாமல் நடப்பதற்கும் கிராம மக்கள் அனுமதிக்கின்றனர்.

  • இதன் காரணமாகவே தற்போது வரை கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாகவும், சுகாதாரமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

கோரிக்கை (Demand)

இந்த வெள்ளகவி கிராமத்திற்குச் சென்று திரும்புவதற்கு 8 மணி நேரம் ஆவதால் விரைவில் சாலை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க....

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

 

English Summary: Corona-free herb village - the pride of Tamil Nadu! Published on: 13 June 2021, 09:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.