1. Blogs

கறுப்பு பூஞ்சை மருந்துக்கு GST விலக்கு: ஆக்ஸிஜன், ஆம்புலன்ஸ்க்கும் வரிக்குறைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
GST exemption for black fungus: Tax reduction for oxygen and ambulance!

கறுப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.

வரிச்சலுகை (Tax concession)

இதேபோல் ஆம்புலன்ஸ், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, ரெம்டெசிவிர் மருந்துகள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை (Request)

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதுபோன்ற மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் (GST Council Meeting)

இந்த விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்காக, ஜிஎஸ்டி கவுன்சிலின் 44வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில்:

ஜிஎஸ்டி விலக்கு (GST exempt)

ஆம்போடெரிசின்-பி மருந்து மீதான ஜிஎஸ்டி நீக்கப்படுகிறது. கோவிட் எனப்படும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான பெரும்பாலான பொருட்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

வரி குறைப்பு (Tax cuts)

  • ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 12 % ஆகவும், மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன்செறிவூட்டிகள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க், கோவிட் பரிசோதனை கருவிகள், பல்சி ஆக்சிமீட்டர், வெப்பநிலை பரிசோதனை கருவிகள், ரெம்டெசிவிர் மீதான ஜிஎஸ்டி 12%ல் இருந்த 5 % ஆகவும் குறைக்கப்படுகிறது.

  • சானிடைசர் மீதான ஜிஎஸ்டி, 18%ல் இருந்து 5 % ஆகக் குறைக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகத் தொடரும்.

விரைவில் அறிவிப்பு (Notice coming soon)

மருந்துகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 4 வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: GST exemption for black fungus: Tax reduction for oxygen and ambulance! Published on: 13 June 2021, 03:15 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.