1. Blogs

விவசாயிகளே, பிரதமரின் காப்பீடு திட்டத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

KJ Staff
KJ Staff
Early morning field

நெல் பயிர் சாகுபடியில்  ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர, கால  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. குறிப்பாக  டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் மட்டும் 12 லட்சம் ஏக்கர் வரை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும், 28 லட்சம் ஏக்கரில் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளை காப்பதற்கு இந்த காப்பீடு பேருதவியாக இருக்கும். தற்போது விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் வேளாண்துறை சார்பாக பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை இணைக்கும் பணி வேளாண் துறை மூலம்  அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்தில் இழப்பீடாக ஏக்கருக்கு, ரூ.30,000 வரை கொடுக்கப் படும். இதற்காக விவசாயிகள் கட்டணமாக ரூ.465ஐ செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சேர  வரும் டிசம்பர் 15 வரை, மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Crop Insurance: Government plans to reach maximum farmers, under the scheme of PMFBY Published on: 24 October 2019, 02:24 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.