காய்கறி விவசாயம் மற்றும் பழ மரக்கன்றுகள் போன்றவற்றின் சாகுபடி பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் சிறு, குறு விவசாயிகளுக்கு, பழ பயிர்கள் சாகுபடி செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அழைப்பு விடுத்துள்ளார். மனித ஆரோக்கியத்தினை நிர்ணயிக்கும் உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழக அரசு ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும், குறைந்தது 25 ஏக்கர் காய்கறி பயிர்கள், 5 ஏக்கர் பழ பயிர்கள் சாகுபடியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புள்ளி விவரங்களின் படி, தமிழகத்தில் 5.08 கோடி ஏக்கர் பரப்பளவில் காய்கறி பயிர்களும், 7.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பழ பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அரசின் அறிவுறுத்தலின் படி விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காய்கறி மற்றும் பழ பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மட்டுமல்லாது அனைவ்ரும் முடிந்தவரை வீட்டிற்கும் தேவையான காய்கறி, பழங்களை வீட்டு தோட்டத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் தினமும், 300 கிராம் காய்கறி, 100 கிராம் பழங்கள் உண்ண வேண்டும் என்ற மருத்துவர்களின் பரிந்துரை பூர்த்தி செய்ய இயலும்.
குறு, சிறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு, 75% மானியத்திலும் காய்கறி மற்றும் பழ மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அரசு தோட்டக்கலை பண்ணை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம் என தெரிவித்தார்.
Share your comments