1. Blogs

சிலிண்டர் விலை 5,175 ரூபாயாக உயர்த்தப்படுகிறது- பொதுமக்கள் அதிர்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cylinder price rises to Rs 5,175 - public shock!

ஆளும் அரசின் பொருளாதாரக் கொள்கைத் தவறாக இருந்தால், நாட்டு மக்கள்தான் இப்படித்தான் படுபாதாளத்தில் தள்ளப்படுவார்கள் என்பதற்கு, இலங்கையில் நடப்பதே சாட்சி.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களை மக்கள் கொள்ளை விலைக் கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.2500 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் கேஸ் சிலிண்டர் விலை கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட உயர்ந்து பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை கூட உயர்ந்துவிட்டதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். கடுமையான மக்கள் போராட்டத்தால் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

புதிய விலை (New price)

இந்நிலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலையை 2500 ரூபாய் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குளாகியுள்ளனர். இதற்கு முன் 12.5 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை 2675 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 5,175 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஒரு சிலிண்டரின் விலை தடாலடியாக 2500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிப்பதற்காகவே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் செய்வது அறியாது வாயடைத்து உள்ளனர். ஒரேநேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்திருப்பது, மக்களை மிகுந்த நிதிச்சுமையில் ஆழ்த்துகிறது.

மேலும் படிக்க...

கர்ப்பிணிகளுக்கு மீன் நல்லதா? ஆய்வில் கண்டுபிடிப்பு!

வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?

English Summary: Cylinder price rises to Rs 5,175 - public shock!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.