1. Blogs

பாம்புகளுடன் நடனம் - தெறிக்க விடும் இளைஞர்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Dancing with snakes - the youth who will splash!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அந்தப் பாம்பையே, உணவாக்கி உண்ணும் மனிதர்களுக்கும் இந்த பூஉலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், பயத்தைக் கைவிட்டுவிட்டுப் பாம்புகளுடன் பழகுவதற்கும் ஒரு மனதைரியம் வேண்டும். அத்தகைய மனதைரியம் கொண்டவர்கள் ஒரு சிலரே. அதில் ஒருவர்தான், நாம் பார்க்கவிருக்கும் இளைஞர்.

இவர் தனது தோளில் இரண்டு பெரிய பாம்புகளை சுமந்து நடனம் ஆடிய வீடியோவுக்கு லைக்குகள் (Likes) குவிந்து வருகின்றன.

உலகிலேயே மிக பெரிய பாம்புகளாக கூறப்படும் பைத்தான் இன பாம்புகள் 20 அடிக்கும் கூடுதலாக வளர கூடியவை. இவை விஷமற்றவை. ஆனால், தனது எடையை விட பெரிய எடை கொண்ட விலங்குகளையும் இரையாக்க கூடிய திறன் படைத்தவை. சில சமயங்களில் மனிதர்களையும் விழுங்கி விடும். எனவே இந்தப் பாம்புகளைப் பொருத்தவரை மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் வாலிபர் ஒருவர் தனது இரு தோளில் 20 அடிக்கும் கூடுதலான நீளம் கொண்ட இரண்டு பாம்புகளை தொங்க விட்டபடியே நடனம் ஆடியுள்ளார்.

அவர் மிக கவனமுடன், பக்கவாட்டில் சென்றபடியே ஆடிய இந்த நடனம் ஒரு சில வினாடிகளே நீடிக்கின்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி-சவரனுக்கு ரூ.384 குறைவு!

புற்றுநோய்க்கு வித்திடும் டால்கம் பவுடர்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

English Summary: Dancing with snakes - the youth who will splash!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.