காதலியின் மீது உயிரையே வைத்திருக்கும் காதலனைப் பார்த்திருக்கிறோம். ஆனால், காதலியின் சிதையில் தாமும் விழுந்து உயிர்விடும் அளவுக்கு, ஓர் இளைஞர் காதல்வயப்பட்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது உண்மையில் நடந்த சம்பவம். காதலியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக காதலன், சுமார் 430 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்திருக்கிறார்.
மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி. 21 வயதான இவர் கடந்த கடந்த வியாழக்கிழமை அன்று, வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவர் தனது உறவுக்கார பையன் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இறுதிச்சடங்கு
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை தேடினர். அப்போது அவர், வயல்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் பிணமாக கிடந்துள்ளார். அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த அவரின் உறவுக்கார இளைஞனான கரண் என்ற 21 வயது இளைஞர். ப்ரீத்தியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் வசிக்கும் பகுதியில் இருந்து 430 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து வந்துள்ளார். சுடுகாட்டில் ஜோதியின் உடலை எரியூட்டுவதை பார்த்த கரண், ஜோதியின் இழப்பை தாங்க முடியாமல் உணர்ச்சி மிகுதியால் துடித்தார்.
கருகியத் காதலன்
திடீரென தானும் அந்த எரியும் சிதையிலேயே குதித்தார். இதை பார்த்த பொதுமக்கள், கரணை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டு, தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கரண், ப்ரீத்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
உடன் கட்டை ஏறுதல்
முன்பொரு காலத்தில், கணவன் இறந்தவுடன் மனைவியையும் அவருடன் சேர்த்துச் சிதையூட்டும் பழக்கம், உடன் கட்டை ஏறுதல் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments