தமிழகத்தில் சித்திரைப் பட்ட மானாவாரி பயிர் சாகுபடி நடந்து வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேளாண் துறை சார்பாக வழங்கும் விதைகளை வாங்கி பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொண்டனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் தற்போது, விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இரண்டு டன் தட்டைப்பயறு, ஒரு டன் கொள்ளு ஆகிய இரண்டும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அரசின் மானியம் போக, தட்டைப்பயறு ஒரு கிலோ ஒன்று ரூ.51.10க்கும், கொள்ளு ரூ.29.68க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் விதை நிலக்கடலையும் விற்பனைக்கு வர உள்ளது. விவசாயிகள் விதை நேர்த்தி செய்வதற்கு ஏதுவாக அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. விதைப்புக்கு முன்பு உயிர் உரங்கள் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்துக்கொண்டால், 25 சதவீதம் வரை அதிக மகசூல் பெற முடியும், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share your comments