கோடை காலமென்பதால் மனிதர்களை போன்றே பிற உயிரினங்களுக்கும் தண்ணீர் தாகம் இருக்கும் என்பதால், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் கால்நடை நீர் தொட்டிகளில், போதிய குடிநீர் நிரப்பி வைக்கும் படி, அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழக அரசின் சார்பில் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால்நடை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் கால்நடைகள், பறவைகள் ஆகியன பயன்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது. தற்போது, கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், கால்நடைகள், பறவைகள் பயன்படுத்துவதற்கு எதுவாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கால்நடை நீர் தொட்டிகளை சுத்த படுத்தி, அவற்றில் முழுமையாக நீர் நிரப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....