கடந்த சில மாதங்களில் ஏராளமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு, பிற சலுகைகள் பற்றிய தகவல்களை பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் தெரிவித்துவிட்டன. சம்பள உயர்வு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இருந்தால் அதனால் PF பணத்துக்கு வரியும் விதிக்கப்படும். அதாவது, PF பங்களிப்பு தொகை குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உயர்ந்தால் வட்டி தொகைக்கு வரி விதிக்கப்படும். இதற்கான விதிமுறைகள் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
PF பங்களிப்பு தொகை (PF Contribution amount)
ஒரு ஊழியர்களின் சொந்த PF பங்களிப்பு தொகை ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் PF வட்டித் தொகைக்கு வரி விதிக்கப்படும். இந்த நடைமுறை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகவே, நடப்பு நிதியாண்டுக்கு (2022-23) உங்கள் சொந்த PF பங்களிப்பு தொகை எவ்வளவு என்பதை மொத்தமாக கணக்கிட வேண்டும்.
உங்கள் நிறுவனம் செலுத்தும் பங்களிப்பு தொகை தேவையில்லை. உங்கள் சொந்த PF பங்களிப்பு மட்டுமே கணக்கிட வேண்டும்.
உங்கள் சம்பள ஸ்லிப் (Salary slip) அல்லது PF அறிக்கையில் சொந்த பங்களிப்பு தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆண்டுக்கான சொந்த PF பங்களிப்பு தொகை மொத்தமாக 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் வட்டி தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும்.
இதனால், PF வாடிக்கையாளர்கள் தங்களது பங்களிப்பு தொகையை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். மேலும், PF மாதாமாதம் வரவு வைக்கப்படுகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
சீனியர் சிட்டிசன்களுக்கு நிறைய வருமானம் எங்கே கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
PF வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா? யாருக்கும் தெரியாத திட்டம்!
Share your comments