தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சாஸ் மற்றும் விழுது தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
வேளாண் படிப்பு (Agricultural Studies)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அவ்வப்போது, தொழில் முனைவோருக்கான பயிற்சியையும் அளித்து வருகிறது.
இந்த வரிசையில் தற்போது, சாஸ் மற்றும் விழுது தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் , 16.11.2021 மற்றும் 17.112021 தேதிகளில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
சிறப்பு அம்சங்கள்
இதில் கீழ்கண்டத் தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
சாஸ்
தக்காளி சாஸ், வரமிளகாய் சாஸ், பச்சைமிளகாய் சாஸ், மற்றும் காளான் சாஸ்
விழுது
இஞ்சி விழுது, பூண்டு விழுது, இஞ்சி பூண்டு விழுது, புளி விழுது(பேஸ்ட்) விழுது, வெங்காய விழுது, தக்காளி விழுது மற்றும் கறிவிழுது.
எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம் (Training Fees)
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1770யை (ரூ.1,500 + 18% GST) 16ம் தேதிசெலுத்தி பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தொடர்புக்கு
கூடுதல் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் - 641 003.
என்ற முகவரியிலும்
0422 - 6611268 என்றத் , தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
பால் கறக்க மறுத்த காளைமாடு- போலீஸில் புகார் அளித்த விவசாயி!
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
Share your comments