கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது.
கொரோனா நெருக்கடி (Corona crisis)
நாம் கடந்துகொண்டிருக்கிறக் கொரோனா நெருக்கடிக் காலம், பைசாவின் அருமையை நமக்கு உணர்த்தியிருப்பதுடன், எதிர்கால சேமிப்பின் உன்னதத்தையும் உணரச் செய்துள்ளது.
ஏனெனில் கொரோனா நெருக்கடியால் பலரும் வேலையை இழந்து தவிப்பதுடன், கிடைத்த வேலைக்குச் செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களைக் கருத்தில்கொண்டு, வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்காகா SBI ஒரு சிறந்த வணிக வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
ரூ.60,000
இதன் மூலம் நீங்கள் வீட்டில் அமர்ந்த படியே, மாதம் 60 ஆயிரம் ரூபாய் எளிதாக சம்பாதிக்கலாம். இந்த சிறந்த வாய்ப்பை நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) உங்களுக்கு வழங்குகிறது.
ஏடிஎம் உரிமம் (ATM Franchise)
பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ ஏடிஎம் பிரான்சைஸை எடுத்து எளிதாக சம்பாதிக்கலாம். வங்கியின் ஏடிஎம் மெஷின்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் நிறுவுவதில்லை. தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம் மெஷின்களுக்கு பிரான்சைஸ் உரிமையை எடுப்பதன் மூலம் நம்மாலும் அதிக லாபம் சம்பாதிக்க முடியும்.
நிபந்தனைகள் (conditions)
-
எஸ்பிஐ ATM பிரான்சைஸ் உரிமையை பெற, உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
-
மற்ற ஏடிஎம்களிலிருந்து அதன் தூரம் 100 மீட்டராக இருக்க வேண்டும்.
-
ATM நிறுவுவதற்கான இடம் தரை தளத்திலும், மிக நன்றாகத் தெரியும் படியான இடத்திலும் இருக்க வேண்டியது அவசியம்.
-
24 மணி நேர மின்சாரம் இருக்க வேண்டும்.
-
இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் மிக மிகக் கட்டாயம்.
-
ATM ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
-
ஏடிஎம் அமைக்கப்பட உள்ள இடம், கான்கிரீட்டினால் ஆனக் கூரையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
-
V-SAT நிறுவுவதற்கு ஏடிஎம் நிறுவப்படும் குடியிருப்பு அல்லது பகுதிக்கான நிர்வாகத்திடம் இருந்து நோ அப்ஜெக்ஷன் (No objections) சான்றிதழ் தேவை.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
ஐடி சான்று - ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
-
முகவரி சான்று - ரேஷன் கார்டு, மின்சார கட்டணம்
-
வங்கி கணக்கு விபரம் மற்றும் பாஸ்புக்
-
புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.
-
ஜிஎஸ்டி எண்
-
நிதி ஆவணங்கள்.
இவற்றைச் சமர்ப்பித்து, SBIயின் ஏடிஎம் உரிமம் பெற்று நீங்களும் சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க...
இந்தப் படிப்பில் சேர்ந்தால் லேப்- டாப் இலவசம்- மாணவர்கள் கவனத்திற்கு!
குளு குளு ஊட்டி மலைரயில் சேவை 6ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்- பயணிக்க ரெடியாகுங்கோ!
Share your comments