1. Blogs

மதுரையில் மழைப்பொழிவு குறையும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Declining rainfall in Madurai

இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவதன் பலனை உலகம் இன்று அனுபவித்து வருகிறது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் இருந்த மரங்களை வெட்டியதாலும், கட்டுமான பணிகளை காட்டி ஆறு, கண்மாய் மற்றும் பட்டா இடங்களிலும் மண்ணை அள்ளியதால் மதுரை இன்று மாசுபட்டுள்ளதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்திய வானிலை மையம் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என எச்சரித்துள்ளது. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொண்டு இனியாவது அழிந்து வரும் இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும். தவறினால் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாவதிலிருந்து தப்ப முடியாது.

ஆய்வு அறிக்கை

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலை மையம் சார்பில் 'ஆப்சர்வுடு ரெயின்பால் வேரியபிலிட்டி அண்ட் சேஞ்சஸ் ஓவர் தமிழ்நாடு ஸ்டேட்' என்ற மழையளவு வேறுபாடுகள் தமிழகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ற ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை உள்ளது.

மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு கடுமையாக குறைந்து வருகிறது; தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்யும் மழையளவு குறைந்து வருகிறது என சுட்டி காட்டப்பட்டுள்ளது. வறண்ட நாட்களின் எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அலட்சியப்படுத்தாமல் அரசும், அதிகாரிகள் தான் செய்ய வேண்டும் என காத்திருக்காமல் மக்களே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். காற்று மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும்.

Also Read | வைரலாகும் வீடியோ: சிறுத்தையை எதிர்த்து நின்ற பூனை!

ஆய்வு அறிக்கையின் முடிவுகளில் சில (30 ஆண்டு கால தரவுகளின்படி)

  • தமிழகம் செப்டம்பரில் அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளது (தென்மேற்கு பருவமழை காலத்தில்).
  • 35 சதவீதம் ஆண்டு சராசரி மழையளவு தென்மேற்கு பருவமழையின் போது கிடைத்துள்ளது (ஜூன் முதல் செப்.,)
  • நீலகிரி மாவட்டம் 55 சதவீத மழைப்பொழிவை தென்மேற்கு பருவமழையின் போது பெற்றுள்ளது. துாத்துக்குடி மாவட்டம்10 சதவீத மழைப்பொழிவை பெற்றுள்ளது.
  • ஜூன் மழைப்பொழிவு மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது.
  • ஜூலை மழைப்பொழிவு மதுரை, நாகப்பட்டினம், திருப்பூர் மாவட்டங்களில் குறைந்துள்ளது.
  • தென் மேற்கு பருவமழை காலம் முழுவதும் மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் மழைகுறைந்துள்ளது.
  • ஆண்டு சராசரி மழைப்பொழிவும் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது.
  • தென்மேற்கு பருவமழையின் போது அதிக மழைப்பொழிவை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது.
  • கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி,பெரம்பலுார், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களிலும் மழைபொழிவை பெற்றுள்ளன.

மதுரைக்கு மழை அளவு

  1. வடகிழக்கு பருவமழை - 47 சதவீதம்
  2. தென்மேற்கு பருவமழை - 32 சவீதம்
  3. கோடை காலம் - 17 சதவீதம்
  4. பனிக்காலம் - 4 சதவீதம்

மேலும் படிக்க

ஒரே நாளில் 1 கோடி டோஸ்: 3-வது முறையாக இந்தியா சாதனை!

வாட்ஸ்ஆப் சேவை விரைவில் நிறுத்தம்: மொபைல் பயனாளர்களே உஷார்!

English Summary: Meteorological Department warns of declining rainfall in Madurai Published on: 08 September 2021, 03:10 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.