கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பின் இந்தியர்கள் மத்தியில் நிதி ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது மற்றும் அவசர கால நிதியை உருவாக்குவது, நிதி இலக்குகளில் முதலிடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிதி ஆரோக்கியம்
கொரோனா தொற்று, நிதி ஆரோக்கியம் தொடர்பான எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது. உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு இணைய நிதிச்சேவை நிறுவனமான ‘ஸ்கிரிப்பாக்ஸ்’ நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில், 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில், 51 சதவீதத்தினர் முன்பை விட அதிகம் சேமிக்கத்துவங்கியுள்ளதாகவும், 36 சதவீதத்தினர் செல்வ வளத்தை இலக்காக கொண்டு சேமிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வைப்பு நிதி
பெரும்பாலானோர் உபரி பணத்தை வைப்பு நிதி அல்லது சேமிப்பு கணக்கில் போட்டு வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.தற்போதைய சூழலில் அவசர கால நிதியை உருவாக்குவது, நிதி இலக்குகளில் (financial target) முக்கியமாக அமைந்துள்ளது. ஆண்களில் 34 சதவீதத்தினர் அவசர கால நிதியை முக்கிய இலக்காகவும், பெண்களில் 38 சதவீதத்தினர் குழந்தைகள் கல்வியை முக்கிய இலக்காகவும் தெரிவித்துள்ளனர். முக்கிய நிதி இலக்குகளில் ஒன்றாக சொந்த வீடும் அமைந்துள்ளது.
மேலும் படிக்க
SBI வங்கியின் அசத்தல் திட்டம்: இரட்டை நன்மையுடன் அறிமுகம்!
ஆதார் கார்டில் பிரச்சனையா? இந்த எண்ணுக்கு டயல் செய்தால் உடனே தீர்வு கிடைக்கும்!
Share your comments