மதிய வேளைகளில், நன்றாக சாப்பிட்டுவிட்டுச் சென்று வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் கண்கள் சொருகும். அப்படித் தூங்குவதை எந்த நிறுவனமும் அனுமதிப்பதில்லை. அவ்வாறுத் தூங்கி வழியும் ஊழியர்கள் மீது, நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது சகஜம்.
ஆனால், அப்படித் தூங்கும் நிலை ஏற்படும் ஊழியர்களின் நலன்கருதி,
பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஊழியர்கள் வேலை நேரத்தில் தூங்க அனுமதி அளித்துள்ளது.
தூங்கக்கூட நேரமில்லாத அளவுக்கு வேலை வாங்கும் நிறுவனங்கள் ஒரு பக்கம் இருக்க, வேலை செய்யும் நேரத்தில் ஊழியர்கள் சிறிது ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலை செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம்.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது வேக்ஃபிட் (wakefit) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்நிறுவனம் படுக்கை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
30 நிமிடம் அனுமதி
இதன்படி, ஊழியர்கள் வேலை நேரத்துக்கு நடுவே 30 நிமிடங்களுக்கு ஒரு குட்டி தூக்கம் போட அனுமதி அளிக்கப்படுகிறது. ஊழியர்கள் உறங்குவதற்கு உரிமை உண்டு எனவும் வேக்ஃபிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வேக்ஃபிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் சைத்தன்யா ராமலிங்ககவுடா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், ஊழியர்கள் அனைவரும் பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை உறங்கலாம் என தெரிவித்துள்ளார். அதுவும் உடனடியாக இந்த 30 நிமிட தூங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் 26 நிமிடம் தூங்கினால் அவர்களது செயல்திறன் 33% அதிகரிக்கும் என நாசா நடத்திய ஆய்விலும், ஊழியர்கள் உறங்குவதால் அவர்கள் சோர்வடைவது தடுக்கப்படும் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் தெரியவந்துள்ளதாக சைத்தன்யா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments