பிரபல ஐபோன் நிறுவனமான ஆப்பிள், ஒரு மின்சார காரைத் வடிவமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
2030க்குப் பிறகு இந்தியச் சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதனால், பல்வேறு நிறுவனங்களும், குறிப்பாக ஆட்டோமொபைல்ஸ் அல்லாத நிறுவனங்களும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன.
ஆப்பிள் கார் (Apple Car)
அந்த வகையில் நாம் பார்க்கவிருப்பது பிரபல ஐபோன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் புதிய கார்தான்.குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், மற்ற எந்த ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனத்தின் உதவியுமின்றி, ஒரு மின்சார வாகனத்தை உருகவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள், தற்போது இறுதி பாகங்கள் சப்ளையர்களைத் தேர்வு செய்து வருகிறது. முன்னதாக, BMW, ஹூண்டாய், நிசான் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, மின்சார வாகன தயாரிப்பில் கூட்டு சேர்ந்து பணிபுரிவது குறித்து ஆராய்ந்தது.
ஆப்பிள் இப்போது, தகவல் கோரிக்கை (RFI), முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) மற்றும் கொடேஷன் கோரிக்கை (RFQ) ஆகியவற்றை உலகளாவிய ஆட்டோமொபைல் பாக உற்பத்தியாளர்களுக்கு அனுப்பும் செயல்முறையை முடித்துவிட்டது.
ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் வாகன உற்பத்தி, ஸ்டீயரிங், டைனமிக்ஸ், சாப்ட்வேர் மற்றும் பணித்திட்ட மேலாண்மை ஆகியவற்றில் பெரிய உற்பத்தி அனுபவம் கொண்ட இரண்டு பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியது.
இந்த பொறியாளர்கள் இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு திட்டக் குழுவில் தயாரிப்பு வடிவமைப்பு பொறியாளர்களாக பணிபுரிகின்றனர்.
நம்பகமான ஆப்பிள் ஆய்வாளரான மிங்-சி குவோ, முன்பு, ஆப்பிள் காரின் அறிமுகம் 2025-2027 வரை நடக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மின்சார காரின் அறிமுகம் 2028 ஆண்டு, அல்லது அதையும் தாண்டிச் சென்றாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆப்பிளின் மின்சார கார் திட்டத்தின் தற்போதைய தலைவர் டக் ஃபீல்ட், ஆப்பிள் நிறுவனத்தை விட்டு ஃபோர்டுக்கு செல்கிறார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...
இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!
Share your comments