தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதர்காக, தபால் துறை வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இத்திட்டத்தின் விளைவாக உடனடியாக ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)
ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை (life certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றுதான் வாழ்நாள் சான்றிதழ். கொரோனா நெருக்கடி காலத்தில் ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை என 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு அளித்தது.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தபால் துறை வங்கி (India Post Payments Bank)
இதற்கிடையே, அஞ்சல் துறை வாயிலாக ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் தபால் துறை வங்கி (India Post Payments Bank) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெறுவது எளிதாகும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இத்திட்டத்தால் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக பயனடைந்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பயனடைந்த ஓய்வூதியதாரர்களின் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் இல்லம் தேடிச் சென்று டிஜிட்டல் சேவையில் பங்கு வகிக்கும் தபால் துறை வங்கிக்கு (India Post Payments Bank) நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
ஆதார் - பான் எண்ணை இன்றே இணைத்து விடுங்கள்: இரு மடங்காகும் அபராதம்!
பழைய பென்சன் திட்டம் தான் வேண்டும்: அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!
Share your comments