கேஸ் சிலிண்டர் (Gas cylinder) விலை மலையளவு உயர்ந்திருக்கும் நிலையில், பெரிய சிலிண்டருடன் குட்டி சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குட்டி கேஸ் சிலிண்டர்
இண்டேன் நிறுவனத்தின் Indane Combo Double Bottle Connection திட்டத்தின் கீழ் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் வாங்கும்போது 5 கிலோ எடையுள்ள குட்டி கேஸ் சிலிண்டரும் பெற்றுக்கொள்ளலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் நெருக்கடியில் இருக்கும்போது இந்த சிறிய சிலிண்டர் உதவிக்கரமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் குட்டி சிலிண்டர் பெறுவதற்கு இண்டேன் வாடிக்கையாளர்கள் தங்களது விநியோகஸ்தரை அணுக வேண்டும்.
சிறப்பு அம்சங்கள்
- இந்த குட்டி சிலிண்டர் 5 கிலோ எடையுள்ளது.
- குட்டி சிலிண்டரை பெற Address proof தேவையில்லை. ஏதோவொரு அடையாள அட்டை இருந்தால் போதும்
- இதற்காக தனியாக டெபாசிட் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை
- நாடு முழுவதும் ஏறக்குறைய எல்லா பகுதிகளுக்கும் இந்த சேவை வந்துவிட்டது.
- குட்டி சிலிண்டர் வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியது! இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம்
Share your comments