1. Blogs

கியாஸ் மானியம் வரவில்லையா: My LPG-யில் புகார் அளிக்கலாம்

R. Balakrishnan
R. Balakrishnan
Gas Subsidy not received

வீட்டு உபயோக கியாஸ் விலையில் குறிப்பிட்ட தொகையை மானியமாக (Subsidy) நுகர்வோர் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்துகிறது. அவ்வப்போது மானிய தொகை வரவில்லை என நுகர்வோர் பலர் தெரிவிக்கும் நிலையில் மானியம் வங்கியில் செலுத்தியதை அறியவும், புகார் அளிக்கவும் myLPG.in என்ற இணையதளம் உதவுகிறது.

மானிய தொகை

ஆண்டு வருமானம் அடிப்படையில் வழங்கப்படும் மானிய கியாஸின் முழு விலையை நுகர்வோர் கொடுத்து வாங்க வேண்டும். பின் மானிய தொகையை வங்கி கணக்கில் மத்திய அரசுசெலுத்தும். நேரடியாக கணக்கில் செலுத்துவதால் கள்ளச் சந்தையில் மானிய காஸ் விற்பது குறைந்தது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே வழங்குவதால் நுகர்வோர் சிக்கனமாகபயன்படுத்தி வருகிறார்கள்.

ஜூன் 2019ல் வீட்டு கியாஸ் ரூ.753 ஆக இருந்த போது ரூ. 267.75 மானியம் வழங்கப்பட்டது. அதற்கு பின் கியாஸ் விலை அதிகரித்தும் ரூ.150க்கு மேல் மானியம் வழங்கவில்லை. மார்ச் 2020 கியாஸ் விலை ரூ.826 இருந்த போது ரூ.263.38, செப்டம்பர் - டிசம்பர் 1, 2020 ரூ. 610 இருந்த போது ரூ.24.95 மானியம் வழங்கிய அரசு, 2021 ஆகஸ்ட் 28 நிலவரப்படி ரூ. 900.50 ஆக (மதுரை) கியாஸ் விலை உயர்ந்தும் ரூ.46.48 தான் மானியமாக வழங்குகிறது.

புகார் அளிக்கும் வழிமுறை

இந்த மானியமும் முறையாக வங்கியில் செலுத்தப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

  • மானிய தொகை வரவில்லை என்றால் myLPG.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.
  • இணையதளம் முன் பக்கத்தில் இன்டேன், பாரத், எச்.பி., லோகோக்கள் இருக்கும். அதில் சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து 'கிவ் யுவர் பீட்பேக் ஆன்லைன்', எல்.பி.ஜி., 'சப்சிடி ரிலேட்டட்', 'சப்சிடி நாட் ரிசீவ்டு' கிளிக் செய்யவும்.
  • நிறுவனத்தில் பதிவு செய்த அலைபேசி அல்லது கஸ்டமர் எண் கொடுத்தால் கிமாஸ் வாங்கிய பின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட மானிய தொகை காட்டும்.
  • அத்தொகை கணக்கில் வரவில்லை என்றால் கீழே 'கம்ப்ளைன்ட்' பிரிவில் புகார் பதிவு செய்து தீர்வு
    காணலாம்.

மேலும் படிக்க

சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு! கவலையில் பொதுமக்கள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் விருப்பமா? இதோ பெஸ்ட் சாய்ஸ்!

English Summary: Gas Subsidy not received: Complaint to My LPG Published on: 29 August 2021, 05:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.