எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும் அதனை ஸ்வீட் (Sweet) எனப்படும் இனிப்போடு கொண்டாடுவது வழக்கம்தான். அப்போதுதான் வீடும், சரி, மக்களும் சரி மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும்.
இனிப்பு வகைகள் (Sweet varieties)
இதற்காகவே நம் தாத்தா பாட்டிக் காலம் முதலே, விஷேசம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவர்.அந்த வகையில் விரைவில் கொண்டாடப்பட உள்ள ரக்ஷாபந்தனை முன்னிட்டு வட இந்தியர்கள் பாரம்பரிய முறைப்படித் தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டு புது முயற்சியாக, வட இந்தியாவில் ரூ9 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்சோரி இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
ரக்ஷாவின் சிறப்பு (Raksha's specialty)
வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். இந்த நாளில் வட இந்தியர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கட்டி இனிப்புகளை வழங்குவார்கள். இப்படியாக தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்குவதால் வட இந்தியாவில் இனிப்புகளின் விலை விண்ணை தொட்டு வருகிறது.
தங்க ஸ்வீட் (Golden Sweet)
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இனிப்பு பலகாரங்களை விநியோகம் செய்யும் கடை ஒன்று 24 கேரட் தங்க இழைகள் பூசப்பட்ட இனிப்புகளை ரக்ஷா பந்தனிற்காக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
காஜூ கட்டி எனப்படும் இந்த இனிப்பின் மீது தங்க இழைகளை பூசி தயார் செய்துள்ளது. இந்த இனிப்பின் விலை என்ன தெரியுமா? உங்களால் நம்ப முடியாது என்றபோதிலும், நம்பித்தான் ஆகவேண்டும்.
கிலோ ரூ.9,000 (Rs 9,000 per kg)
இந்த இனிப்பு கிலோ ரூ9 ஆயிரத்திற்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இனிப்பை வாங்க மக்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகமாகியுள்ளது. பலர் ரக்ஷா பந்தினிற்கு தனக்கு நெருக்கமான சகோதர சகோதரிகளுக்கு வழங்க இந்த இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளனர்.
மேலும் படிக்க...
ரூ. 65000 மட்டுமே பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் பைக் ! 90 கிமீ மைலேஜ்!
Share your comments