கோழிப்பண்ணைத் தொழிலை லாபகரமாக நடத்த பண்ணையாளர்களுக்கு அரிய வாய்ப்பு காத்திருப்பதாக நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் குளிர் காலம் தொடங்கியதை அடுத்து அங்கு முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் மாதங்களில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் ஒரு முட்டை ரூ.4.50 வரை விற்பனையாவதற்கு வாய்ப்புண்டு என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் முட்டையின் கையிருப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத், ஹோஸ்பேட் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் , கடந்த 6 மாதமாக முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது.
இது போன்ற காரணங்களினால் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.10-க்கும் மேல் இருக்கும் என நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. எனவே கோழி பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்கால தேவையை கவனத்தில் கொண்டு லாபம் பெற அறிவுறுத்தப் படுகிறார்கள்.
Share your comments