சத்தீஸ்கர் மாநில அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்சன் உயர்வு (Pension Hike)
இந்தியாவில் மாநில அரசுகள் தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. அவ்வகையில் அண்மையில் ராஜஸ்தான், பீகார், ஹரியானா, கோவா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் 4% உயர்த்தி அறிவித்தது. இதனால் ஊழியர்களின் மாத ஊதியம் வெகுவாக உயர்ந்துள்ளது.
இதற்கு மத்தியில் தற்போது சத்தீஷ்கர் மாநில அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்த திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முன்னாள் MLA-களின் ஓய்வூதியமானது 35,000 இல் இருந்து 58,300 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே அல்லது விமான பயணத்திற்கு தற்போதுள்ள உதவித்தொகை ரூ.8 லட்சம் என்பதில் இருந்து ஆண்டுக்கு 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய தொகை உயர்வால் அரசுக்கு ஒரு ஆண்டில் ரூ. 6.80 கோடி நிதி சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் திட்டம்: மத்திய விவசாய அமைச்சர் வேண்டுகோள்!
ரேஷன் கடைகளில் இனி புதிய வசதி: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அமல்!
Share your comments