
மூத்த குடிமக்களுக்கான தேசிய பென்சன் திட்டம் (NPS) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பென்சன் சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்க்கவும், மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கவும் விதிமுறைகள் மாற்றப்படுகின்றன. புதிய மாற்றத்தின் படி இனி மூத்த குடிமக்கள் அதிக பென்சன் பெறலாம். பென்சன் ஒழுங்குமுறை வாரியம் (PFRDA) பல புதிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
தேசிய பென்சன் திட்டம் (National Pension scheme)
தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வயது 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதிற்குப் பிறகு தேசிய பென்சன் திட்டத்தில் சேரும் சந்தாதாரர்களுக்கு PFRDA ஒரு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. அவர்கள் இப்போது 75 வயது வரை NPS கணக்கைத் தொடரலாம். இது தவிர, 5 லட்சத்துக்கும் குறைவான ஓய்வூதிய நிதிகளில், முழுப் பணத்தையும் இனி வாடிக்கையாளர்கள் எடுக்கலாம். இதற்கு முன்னர் 2 லட்சத்துக்கும் குறைவான ஓய்வூதிய நிதி உள்ளவர்கள் மட்டுமே முழுத் தொகையையும் எடுக்க முடியும்.
விதிமுறை மாற்றங்கள் (Change of Rules)
இவ்வாறு எடுக்கும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பாகும். நடப்பு நிதியாண்டில் தேசிய பென்சன் திட்டத்தில் 10 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்க்க PFRDA இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு 6 லட்சம் புதிய சந்தாதாரர்கள் NPS மற்றும் அடல் பென்சன் யோஜனா (APY) திட்டத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் உத்தரவாதமான வருமானத்துடன் கூடிய இன்னும் சில தயாரிப்புகளையும் PFRDA அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபோன்ற வசதிகளும் விதிமுறை மாற்றங்களும் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் படிக்க
Share your comments