டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுத விரும்புவோர், விண்ணப்பிக்க விதிக்கப்பட்டக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதாவது ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை), ஆகிய 92 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு
இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விதிக்கப்பட்டக் காலக்கெடு, ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
காலக்கெடு
அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22ம் தேதியே கடைசி நாள். இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
திருத்தம்
விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 29ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - அரசு அறிவிப்பு!
தன் உயிரைக் கொடுத்துத் தாயைக் காப்பாற்றிய மகன்!
Share your comments