பிப்பர்ஜாய் புயலை அமைதிப்படுத்தும் நோக்கில் குஜராத் மாநில பாஜகவின் முன்னணி தலைவரும், அப்தாசா தொகுதி எம்.எல்.ஏவுமான பிரத்யுமன்சிங்க் ஜடேஜா, ஜாகாவ் கடற்கரையில் பூஜை மேற்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரத்யுமன்சிங்க் ஜடேஜா அடிப்படையில் ஒரு விவசாயி. இவர் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி காலை 8:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயலான பிப்பர்ஜாய் வடக்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று காலை 8:30 மணியளவில் போர்பந்தரில்(குஜராத்) இருந்து தென்- தென்மேற்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டது. இதனால் புயல் குஜராத் நோக்கி நகர வாய்ப்புள்ளது என முதற்கட்ட வானிலை நிலவரங்கள் வெளிவந்தன.
இதனையடுத்து குஜராத் மாநிலம் ஜாகாவ் கடற்கரைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ பிரத்யுமன்சிங்க் ஜடேஜா புயலினை அமைதிப்படுத்தும் வகையில் பூஜை மற்றும் அர்ச்சனையில் ஈடுபட்டார். இதுத் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் கடும் விமர்சனத்திற்கு மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சிலர் பாஜக எம்.எல்.ஏ-வின் பூஜை நிகழ்வுக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய வானிலை நிலவரப்படி அடுத்த 12 மணி நேரத்தில் மிகக்கடுமையான சூறாவளி புயலாக பிப்பர்ஜாய் வலுப்பெற வாய்ப்புள்ளது. ஆனால் குஜராத் மாநிலத்தில் புயலின் தாக்கம் இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Biparjoy புயலின் தற்போதைய நிலை:
Biparjoy சூறாவளி அடுத்த 12-24 மணி நேரத்தில் மிகவும் தீவிரமான சூறாவளி புயலாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் அதிவேக காற்று மற்றும் கடுமையான வானிலை நிலவும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு-மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ‘Biparjoy’ புயல் அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று-நான்கு நாட்களில் அரபிக்கடலோர பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 135-145 கிமீ முதல் மணிக்கு 160 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு மாநிலங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Share your comments