பெண் மற்றும் தனியாக வாழும் ஆண் அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்புக்காக 730 நாட்கள் விடுமுறைக்கு தகுதியுடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை, பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் மற்றும் யூனியனின் விவகாரங்கள் தொடர்பான பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பெண் அரசு ஊழியர் மற்றும் ஒற்றை ஆண் அரசு ஊழியர்கள், மத்திய சிவில் சர்வீசஸ் (விடுப்பு) விதிகள், 1972 இன் விதி 43-C இன் கீழ் குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு (CCL) தகுதியுடையவர்கள்.
18 வயது வரை உள்ள இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்கு முழு சேவையின் போது அதிகபட்ச காலம் 730 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைக்கு எத்தகைய வயது வரம்பும் இல்லை, ”என்று அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
மகப்பேறு நன்மைச் சட்டம், 1961 இன் கீழ், ஒரு பெண்ணுக்கு கர்ப்பத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு (180 நாட்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது, இது கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு ஏற்பட்டால் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். ஆண் பணியாளர்கள் குழந்தை பிறந்து அல்லது தத்தெடுத்த ஆறு மாதங்களுக்குள் 15 நாட்கள் விடுப்பு எடுக்க உரிமை உண்டு. இரண்டும் குறைவான குழந்தைகள் கொண்ட தந்தைகள் அல்லது ஒரு வருடத்திற்கும் குறைவான குழந்தையை தத்தெடுத்த ஆறு மாதங்களுக்குள் 15 நாட்களுக்கு தந்தைவழி விடுப்பினை (paternity leave) பெறலாம்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் தனது அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு மற்றும் ஆண்களுக்கு ஒரு மாத மகப்பேறு விடுப்பு வழங்குவதாக சமீபத்தில் தான் அறிவித்தார்.
உலகெங்கிலும், பல நாடுகளில் குழந்தை பராமரிப்பு விடுப்புகளுக்கு வெவ்வேறு மாதிரியான கொள்கைகள் உள்ளன. ஸ்பெயினில், பணியாளர்கள் 16 வார மகப்பேறு விடுப்பு எடுக்கலாம், அதே சமயம் ஸ்வீடனில் குழந்தை பராமரிப்புக்கு தந்தைகளுக்கு மூன்று மாதங்கள் வரை விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்றொரு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் தாய், தந்தையருக்கு தலா 164 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்குகிறது.
அமெரிக்காவில், பெடரல் சட்டத்தின் கீழ் ஊதியத்துடன் கூடிய தந்தைவழி விடுப்பு இல்லை, ஆனால் கனடா பெற்றோருக்கு ஐந்து கூடுதல் வார விடுமுறை (40 வாரங்களுக்கு) வழங்குகிறது.
UK-ல் குழந்தை பராமரிப்புக்கு 50 வாரங்கள் வரை விடுமுறை வழங்குகிறது. சிங்கப்பூரிலும் ஊழியர்களுக்கு இரண்டு வார ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் விதி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
யப்பாடா.. 3 ரக தக்காளியும் கிலோவுக்கு ரூ.80 வரை அதிரடி குறைவு
குடும்பத் தலைவிக்கான 1000 ரூபாய்- மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய அரசு
Share your comments