விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த கால்த்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
நெல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரர்களை அணுக வேண்டியும், மேலும் வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: UPSC ஆட்சேர்ப்பு 2023: விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 21
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் அதாவது 3909 எண்கள் டயர் வகை அறுவடை இயந்திரங்கள் மற்றும் 547 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கல் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 17 எண்கள் டயர் வகை இயந்திரங்கள் மற்றும் 33 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கள் விபரங்கள் உட்பட வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் மரு.கா.ப கார்த்திகேயன் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
உழவன் செயலி (Uzhavan App)
- இதனை விவசாயிகள் மானிய விலையில் பெறுவதற்கு முதலில் உங்களின் Mobile-லில் play store அல்லது App Store-ல் இருந்து உழவன் செயலியை (Uzhavan APP) பதிவிறக்கம் செய்யவேண்டும்.
- வேளாண் இயந்திரத்தை தேர்வு செய்தல்
- பின்னர் அதில் இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்யவேண்டும்.
- அதன் பின்னர் வகை என்பதின் கீழ் பண்ணை இயந்திரங்கள் (பொறியியல் துறை) என்பதை தேர்வு செய்யுங்கள்
- அதன் பின்னர் உழவன் செயலியில் அவரது விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
- பின் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும்.
- பின்னர் உரிய விவரங்களைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு அடையாள மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.
உழவன் செயலி பதிவிறக்கம் செய்ய: கிளிக் செய்யுங்கள்
மேலும் படிக்க:
இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2023: 255 Navik பணியிடங்கள்
Share your comments