மாவட்ட தோட்டக்கலைத்துறை பொதுமக்களுக்கு மானிய விலையில் 5 வகையான காய்கறி விதைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். காய்கறிகளின் உற்பத்தியை பெருக்குவதற்கும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டம் உதவும் என்கிறார்கள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தோட்டக்கலைத்துறையிலும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்க தோட்டக்கலைத்துறை நிகழாண்டில் வீடுகள் தோறும் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக நாட்டு காய்களான சுரைக்காய், கத்திரி, பீர்க்கங்காய், முருங்கை, வெண்டைக்காய், அவரை என பல்வேறு வகையான விதைகள் அடங்கிய 50 கிராம் பொட்டலம் மானியத்தில் ரூ.10க்கு விநியோகிக்க படுகிறது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய வீடுகளின் ஒரு பகுதியில் காய்கறித் தோட்டம் அமைத்து ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்க்ள தங்களின் ஆதார் அட்டை நகலை அளித்து மானிய விலையில் பெற்று கொள்ளலாம்.
கையிருப்பாக 10,000 பேருக்கு வழங்குவதற்கான விதைப் பொட்டலங்கள் தயாராக உள்ளன. இவைகள் மாவட்ட துணை தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் சென்று வாங்கி கொள்ளலாம்.
Share your comments