Krishi Jagran Tamil
Menu Close Menu

வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் ஒரு நாள் வகுப்பு

Wednesday, 05 February 2020 11:16 AM , by: Anitha Jegadeesan
Organic rooof garden

நகரபுற மக்களில் இன்று பெரும்பாலானோர் தோட்டம் அமைத்தலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக குறைந்த இட வசதியில் இயன்ற வரை சிறிய தோட்டங்களை அமைத்து வருகிறார்கள். மாடித்தோட்டம் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதினாலும், அவற்றை பற்றிய போதிய விளக்கங்கள் இல்லாததினாலும் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் ஒரு நாள் பயிற்சி வகுப்பினை ஏற்பாடு செய்துள்ளது. 

பயிற்சி மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்தியில், மாடித்தோட்டம் அமைத்து தொழில் முனைய விரும்புவோர்க்கு உதவும் நோக்கில் கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தின் சார்பில் மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

roof garden farmers

இந்த பயிற்சியானது, முக்கியமாக தொழில்முனைவோர்,  நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக வடிவமைக்க பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி (நாளை) நடைபெறவுள்ள பயிற்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெறும்.  பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு குறிப்பேடு, கையேடு மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியின் நிறைவாக அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்க பட உள்ளது. பயிற்சிக்கான கட்டணமாக ரூ.650. செலுத்தி இணைந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 

எச்.கோபால்
மைய பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்,
முதல்தளம்,  சிப்பெட் எதிரில்,
கிண்டி, சென்னை – 600 032
044-22250511

Terrace gardening TNAU organised Terrace Gardening Workshop Home Gardening Workshop Terrace Gardening one day worshop in Chennai Terrace Gardening Ideas

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு
  2. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
  3. பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்
  4. விற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்
  5. எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது
  6. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி
  7. கரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்
  8. வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
  9. 3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு
  10. கரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.