தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில், இன்று (மார்ச் 22) முதல் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.
விலை உயர்வு (Price Raised)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 2021 அக். மாதம் வீட்டு சிலிண்டர் 915.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் விலை கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என நான்கு மாதங்களாக மாற்றப்படவில்லை.
இந்நிலையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை இன்று (மார்ச் 22) முதல் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன்மூலம் சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 915.50 ரூபாயில் இருந்து ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் கடந்த 137 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையல், இன்று 76 பைசா அதிகரித்துள்ளது.
கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இல்லத்தரசிகள், குடும்ப தலைவர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஒரே நாளில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இரு விலைவாசி உயர்வை பொதுமக்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று இனி தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: புதிய விதிமுறையை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
தமிழகத்தில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
Share your comments