மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று Whatsapp-ல் புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி பயனர்கள், யாருக்கும் தெரியாமல் மறைக்க நினைக்கிற உரையாடல்களை 'சாட் லாக்' என்ற புதிய ஆப்ஷன் மூலம் இனி மறைக்கலாம்.
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட சமூக வலைத்தளங்களில் வாட்ஸ் அப் செயலியும் ஒன்று. இதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் கைப்பற்றியது முதல் அவற்றில் புதிய வசதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றும் பயனர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த Chat Lock என்கிற வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளார். “Chat lock” ஆப்ஷனை எப்படி ஆக்டிவ் செய்வது, இதனால் என்ன பயன் இருக்குனு விரிவாக காணலாம்.
நம்மில் பலருக்கு தனிப்பட்ட முறையில் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் உரையாடி வருவோம். இதனை மற்றவருக்கு தெரியாமல் பாதுகாப்பது என்பது தற்போது வரை பெரும் சிரமம் தான். ஆனால் இப்ப அந்த கவலை வேண்டாம்.
முதலில் நீங்கள் யாருடனான சாட்டினை மறைக்க வேண்டும் என நினைக்கிறீங்களோ, அவர்களது சாட் பக்கத்திற்கு செல்லுங்கள். பின் view contact என்பதை கிளிக் செய்யவும். அதில் இறுதி ஆப்ஷனாக chat lock என்கிற வசதி இருக்கும். அதனை கிளிக் செய்தால், மொபைலின் கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கேட்கும். அதையும் கொடுத்துவிட்டால் அவ்வளவு தான், இனி அந்த சாட் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறையும்.
மறைக்கப்பட்ட உரையாடலை நீங்கள் Archive Chats Check செய்வது போல தெரிந்துக்கொள்ளலாம். இந்த வசதி தனி நபருடனான உரையாடலை மட்டுமல்ல, ஒரு குழுவின் உரையாடலையும் உங்களால் இதை முறையை பின்பற்றி மறைக்க இயலும்.
சாட் லாக் செய்யப்பட்டிருக்கும் போது, யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், அந்த அரட்டை பூட்டப்பட்டிருந்தால், அனுப்புநரின் பெயர் மற்றும் செய்தியின் உள்ளடக்கம் ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்படும்.
இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் அதுவும் whatsapp beta பயனர்களுக்கு கிடைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில், கணினி மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தும் வாட்ஸ் அப்களிலும் Chat Lock ஆப்ஷன் சேர்க்கப்பட்டு உரையாடலைத் திறக்க ஒருவர் தனது தொலைபேசியில் இருந்து கடவுச்சொல்லை உள்ளீடும் வசதியையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Chat lock option குறித்து தகவல்கள் வெளியானது முதலே அதற்கு வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: whatsapp fb
மேலும் காண்க:
Share your comments