பிரபலமான சமூக ஊடக செயலிகளுள் ஒன்றான வாட்ஸ் அப் செயலியில் சில பயனர்கள் மற்றவர்களை ஸ்பேம் செய்யும் நோக்கத்திற்காக தளத்தை பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. சம்மந்தமே இல்லாத ஒருவரிடமிருந்து வரும் மெசேஜினை ரிப்போர்ட் செய்வது எப்படி என்று இப்பகுதியில் காண்போம்.
சமீப நாட்களாக வாட்ஸ் அப் குழு விவாதங்களிலோ அல்லது தனிப்பட்ட அரட்டைகளிலோ இந்த லிங்கினை கிளிக் செய்யுங்கள், இதனை சப்ஸ்கிரைப் செய்யுங்கள், பிங்க் வாட்ஸ் அப் வந்துவிட்து அது இது என சம்மந்தமே இல்லாத பல மெசேஜ்கள் வருவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற லிங்கினை தொடராமல் இருப்பதோடு, அதுபோன்ற மெசேஜ்களை ரிப்போர்ட் செய்வதும் அவசியம்.
ரிப்போர்ட் செய்வதன் மூலம், அந்த நபர் அனுப்பிய மெசேஜ் தொடர்பான புகார் வாட்ஸ் அப் நிர்வானத்திற்கு பரிந்துரைப்பதோடு, அவரை பிளாக் செய்து அவரிடமிருந்து எவ்வித மெசேஜும் வராமல் தடுக்க இயலும். இதன் மூலம் ஸ்பேம் செய்திகளின் தொல்லைகளை நீக்கலாம்.
ஸ்பேம் மெசேஜ் எப்படி இருக்கும்?
- தேவையற்ற மெசேஜ் எப்படி இருக்கும் என்பதை வாட்ஸ்அப் விளக்கியுள்ளது. நீங்கள் சந்தேகத்திற்கிடமான செய்தியைப் பெற்றுள்ளீர்கள் அல்லது அனுப்புநரை நம்ப முடியாது என்பதைக் குறிக்கும் தடயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சில:
- இணைப்பைத் தட்டவும் அல்லது இணைப்பின் மூலம் புதிய அம்சங்களைச் செயல்படுத்தவும் (லிங்க் வடிவில்)
- கிரெடிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கு எண்கள், பிறந்த தேதி, கடவுச்சொற்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவலைப் பகிரும்படி கேட்கும் மெசேஜ்
- பாலியல் ரீதியான மெசேஜ்
- வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும் என்று கூறுவது. புதிய அப்டேட் வெர்ஷன் வந்துள்ளது(பிங்க்), அதனை இன்ஸ்டால் செய்யவும் என்பது.
அறிமுகமில்லாத எண்களில் இருந்து தோன்றும் விரும்பத்தகாத மெசேஜ்களை ரிப்போர்ட் செய்யும் முறை:
- உங்கள் மொபைல்/கணினியில் - WhatsApp செயலியைத் திறக்கவும்.
- தேவையற்ற செய்தி அல்லது நீங்கள் புகாரளிக்க விரும்பும் அனுப்புநரைக் கொண்ட அரட்டைக்கு (chat box) செல்லவும்.
- நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தியைத் அழுத்திப் பிடிக்கவும். இது செய்தியை முன்னிலைப்படுத்தி திரையின் மேற்புறத்தில் ஒரு சிறுப்பெட்டி தோன்றும்.
- அதில், நீங்கள் "ரிப்போர்ட்" விருப்பத்தைக் காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
- நீங்கள் ஏன் செய்தியைப் புகாரளிக்கிறீர்கள் என்பது பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு WhatsApp கேட்கும். வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து பொருத்தமான காரணத்தைத் தேர்வு செய்யவும்.
- தேவைப்பட்டால், சிக்கலைப் பற்றிய விளக்கம் அல்லது கருத்துகளைச் சேர்க்கவும் உங்களால் இயலும்
- தேவையான தகவலை வழங்கிய பிறகு, உங்கள் சாதனத்தைப் பொறுத்து "அடுத்து" அல்லது "சமர்ப்பி" என்பதைத் தட்டவும்.
அவ்வளவு தான் இப்போது இந்த மெசேஜ் குறித்த புகார் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு சென்று விடுவதோடு, நீங்கள் அந்த எண்ணை பிளாக் செய்வதோடு அவரிடமிருந்து இனி எவ்வித மெசெஜ் வருவதையும் தடுக்க இயலும்.
மேலும் காண்க:
Share your comments