சொர்க்கமே என்றாலும் அங்கும் வாய்ப்பு கிடைத்தால் விவசாயம் செய்ய முன்வருவதுதான் தமிழனின் மனசு. இதற்கு எடுத்துக்காட்டுதான் நடிகர் நெப்போலியன்.
தமிழ் திரையுலகில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நெப்போலியன். 1963-ம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு பல படங்களில் சோலோ நாயகனாக உருவெடுத்த நெப்போலியன் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம், கன்னடா மற்றும் ஆங்கில படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவில்
நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் கால்பதித்த நெப்போலியன் 1980-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்துள்ளார். திமுவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கே.என்.நேரு இவரின் மாமா. அதன்பிறகு 2014- திமுகவின் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
விவசாயம்
தமிழில் கடைசியாக அன்பறிவு படத்தில் நடித்திருந்த நெப்போலியன் படப்பிடிப்பு நேரத்தில் மட்டும் இந்தியாவிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்நிலையில், அமெரிக்காவில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ள நெப்போலியன் அதில் விவசாயம் செய்து வருகிறார். தற்போது தனது விவசாய தோட்டத்தில் அருகில் இருந்து நெப்போலியன் பதிவிட்டுள்ள வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
நடினாகப் பலரது உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நெப்போலியன், தற்போது நான் அமெரிக்க விவசாயி என்ற மார்தட்டிக்கொள்வது மகிழ்ச்சியான விஷயம் தானே.
மேலும் படிக்க...
கவரும் ஸ்ட்ராபெரி - விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!
Share your comments