உலகயே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனாவால் மாமிசம் உண்பவரக்ளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக கோழி இறைச்சியின் மூலம் வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை அடுத்து பிராய்லர் கோழிகளின் இறைச்சி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 150 ரூபாய் வரை விற்பனையான கோழி இறைச்சி தற்போது வெறும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வாங்குவதற்கு யாரும் முன் வருவதில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராய்லர் கோழி இறைச்சியை போன்றே முட்டையின் விலையும் வெகுவாக சரிந்து உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், விலை மிகவும் குறைவாக விற்கப் படுவதாக தெரிவித்துள்ளனர். ஒரு முட்டையின் விலை ரூ.2.65க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இறைச்சி பிரியர்கள் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நாட்டு கோழி மற்றும் கருங்கோழிகளை வாங்கி சுவைக்க தொடங்கி உள்ளதால் இதற்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை கிலோ ரூ.450க்கு விற்பனையான நாட்டுகோழி தற்போது ரூ.600க்கு விற்பனை செய்யபடுகிறது.
கடந்த மாதம் வரை கருங்கோழி ஒரு கிலோ ரூ.600க்கு விற்பனை நிலையில் தற்போது ரூ.200 அதிகரித்து ஒரு கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யபடுகிறது. இதேபோல் முட்டைகளிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. ரூ.10க்கு விற்பனையான நாட்டுகோழி முட்டை ரூ.15 ஆகவும், ரூ.15க்கு விற்பனையான கருங்கோழி முட்டை ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
Share your comments