1. Blogs

பென்சன் வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு:

R. Balakrishnan
R. Balakrishnan
Pensionors

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு மூத்த குடிமக்களுக்கு சலுகை கிடைத்துள்ளது. பென்சன் வாங்கும் அனைத்து மூத்த குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசமும் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அடிக்கடி நீட்டிக்கப்பட்டது.

ஆயுள் சான்றிதழ் (Life Certificate)

கடைசியாக வெளியாகிய அறிவிப்பின் படி, அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் நிறையப் பேர் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இதனால் மூத்த குடிமக்களுக்கான பென்சன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

அதாவது, பென்சன் திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இனி ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் எந்த நெருக்கடியும் இருக்காது. பென்சனர்கள் சமர்ப்பிக்கும் இந்த ஆயுள் சான்றிதழ் ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். உதாரணமாக, 2022 ஏப்ரல் 16ஆம் தேதி நீங்கள் இந்த சான்றிதழைச் சமர்ப்பித்தால் 2023 ஏப்ரல் 16ஆம் தேதி வரை மட்டுமே இது செல்லும். அதன் பிறகு மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் EPS 95 பென்சன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கான பென்சன் வருவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டே பிஎஃப் அமைப்பு இச்சலுகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இதைச் செய்து உடனே இணைக்கலாம்!

பென்சன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி: அரசின் சூப்பர் திட்டம்!

English Summary: Important happy announcement to Pensionors! Published on: 17 April 2022, 02:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.