மண்ணைப் பாதுகாக்கத் தவறினால் , அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா விவசாயம் செய்யமுடியாத நாடாக மாறும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேள்வி பதில் நிகழ்ச்சி (Question and answer show)
ஈஷா சார்பில் 'ஆனந்த சங்கமம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.
கரிம வளம் (Organic resources)
அப்போது, உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களில் 33 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இதற்கு அடிப்படை காரணம் மண்ணில் தேவையான சத்துக்கள் இல்லை. பொதுவாக, விவசாய நிலத்தில் 4 முதல் 5 சதவீதம் கரிம வளம் இருக்க வேண்டும்.
ஐ.நா. கருத்து (UN Comment)
குறைந்தபட்சம் 2 சதவீதம் கரிம வளம் இருந்தால் தான் அதை மண் என்றே சொல்ல முடியும் என ஐ.நா அமைப்பு கூறுகிறது. ஆனால், நம் நாட்டு மண்ணில் சராசரி கரிம வள அளவு வெறும் 0.68 சதவீதம் தான் உள்ளது.
அழியும் அபாயம் (Risk of extinction)
இந்த நிலை இப்படியே போனால் அடுத்த 30 ஆண்டுகளில் மண் மணலாக மாறி நாட்டில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். இப்படி இருக்கும் போது சுற்றுச்சூழல் குறித்து பேசாமல் எப்படி இருக்க முடியும்?
சத்தான உணவு (Nutritious food)
நம் உடலே இந்த மண்ணில் இருந்து வந்தது தான். இதை பலரும் உணரமால் இருக்கிறார்கள். மண் வளமாக இருந்தால் தான் சத்தான உணவு கிடைக்கும்.
யோகா பயிற்சி (Yoga practice)
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகத்தையாவது கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதற்காக, உயிர் நோக்கம், சூரிய சக்தி போன்ற யோக பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பணியை வரும் ஆண்டுகளில் தீவிரப்படுத்த இருக்கிறோம்.
பயன்படுத்திக்கொள்ளலாம் (Can be used)
ஈஷா யோகா மையம் என்பது ஏராளமான சாமானியர்களின் உதவியாலும் ஆதரவாலும் பக்தியுணர்வாலும் உலகம் போற்றும் அளவிற்கு இப்போது வளர்ந்துள்ளது. இதை தமிழ் மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ்க் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்க வாரத்தில் ஒரு நாளாவது ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் சேலையும் அணிந்து கொள்ள வேண்டும். பக்தியில் ஊறிய தமிழ் கலாச்சாரத்தை எப்போதும் பேணி வளர்க்க வேண்டும்.
இவ்வாறு சத்குரு தெரிவித்தார்.
27 ஆயிரம் பேர் (27 thousand people)
முன்னதாக, ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதன் நிறைவு நிகழ்வாக இந்த ஆனந்த சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!
Share your comments