நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயக்கப்படும் அனைத்து ரயில்களின் சேவைகளும், ஆகஸ்ட்,12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பேசஞ்சர் ரயில் (Passangers Train) சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
அதேநேரத்தில், ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டபிறகு, ஜூன் 1 முதல் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் ரயில்சேவை மீண்டும் தொடங்கியது.
முதற்கட்டமாக, 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' விரைவு ரயில், மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் மட்டும் இயக்கப்பட்டன.
ரயில் சேவைகள் ரத்து ( Train Service Cancelled)
இந்நிலையில், நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட்12ம் தேதி வரை இயக்கப்படாது என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆக.,12 வரை பதிவு செய்யப்பட்ட, அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் ராஜ்தானி மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம் ( Ticket fare )
எனினும் முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் விரைவில் பயணிகளின் வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள், தங்கள் பயணத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க...
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்
RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?
முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்
Share your comments