நீங்கள் புதிதாக தொழில் தொடங்கி நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா இரயில்வே துறை உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. இதில் மாதம் 80000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. IRCTC நிறுவனம் ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கல், சுற்றுலா மேலாண்மை மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது IRCTC நிறுவன உதவியுடன் நீங்கள் மாதம் ரூ.80000 வரை சம்பாதிக்கலாம். அதாவது IRCTCயின் டிக்கெட்டு ஏஜெண்டாக பணி புரிய வேண்டும். இந்த முகவர் பணிக்கு நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு (Job Offer)
IRCTCயின் இணையதளத்திற்கு சென்று முகவர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு நீங்கள் தட்கல், RAC உள்ளிட்ட அனைத்து வகையான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும். அதாவது IRCTCயிடம் இருந்து டிக்கெட்களை பெற்று முன் பதிவு செய்து கொடுத்தால் கணிசமான தொகையை கமிஷனாக பெறுவீர்கள். IRCTCயின் முகவராக பணியாற்ற விரும்புவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு வருடத்திற்கு முகவராக பணியாற்ற ரூ.3999 செலுத்த வேண்டும். அத்துடன் 2 வருடங்கள் ஏஜெண்ட் ஆக பணியாற்ற ரூ.6999 செலுத்த வேண்டும். ஒரு மாதத்தில் 100 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை செய்தால் அடுத்த டிக்கெட்டை பெற ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கமிஷன் (Commission)
ஒரு மாதத்தில் 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.8 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே போல் 300 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் முகவர்கள் முன்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஏசி அல்லாத கோச் டிக்கெட்டை முன்பதிவு செய்வதால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 வரை கமிஷன் கிடைக்கிறது. மேலும் ஏசி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்வதால் ரூ.40 வரை பெற முடியும். அத்துடன் பயணச்சீட்டு கட்டணத்தின் 1% தொகையும் தங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி நீங்கள் ரூ.80000 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க
இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி!
Share your comments