பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் வேலை உயர்வு போன்ற சில காரணங்களால், வேலைப் பார்க்கும் நிறுவனங்களில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது உண்டு. இந்நிலையில் ஊழியர் பணியிடம் மாறும் நேரத்தில், வருங்கால வைப்பு நிதி கணக்குகளை புதிய நிறுவனங்களுடன் இணைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், அதுவே அதிக வரிகளைச் செலுத்த வழிவகுத்து விடும்.
பிஎஃப் கணக்கு (PF Account)
நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போது, EPFO கணக்கு தொடங்கப்படும். அதற்காக UAN எண் வழங்கப்படும். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் இந்த UAN-இன் கீழ் உள்ள PF கணக்கின் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்துவர். இந்நிலையில், நீங்கள் மற்றொரு நிறுவனம் மாறும் போது, உங்களுடைய UAN எண் கொண்டு புதிய நிறுவனம் வேறொரு புதிய கணக்கைத் தொடங்கி அதில் பணத்தைச் செலுத்துவர். பழைய PF கணக்குடன் கண்டிப்பாக உங்களின் புதிய கணக்கை இணைப்பது அவசியமாக உள்ளது.
பிஎஃப் விதி (PF Rule)
ஒரு நிறுவனத்தில் உங்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாகவும், உங்கள் PF கணக்கில் உள்ள மொத்த வைப்புத் தொகை 50,000 ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால், திரும்பப் பெறும் போது நீங்கள் எந்த வரியைச் செலுத்தத் தேவையில்லை.
இருப்பினும், 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், 10 சதவீதம் (TDS) வரி செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடப் பணி செய்திருந்தால், உங்கள் பிஎஃப் நிதியைத் திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படாது.
உங்கள் PF கணக்குகளை இணைப்பதன் மூலம், உங்களின் அனைத்து பணி அனுபவங்களையும் UAN ஒருங்கிணைக்கும். அதாவது, நீங்கள் 3 வெவ்வேறு நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும், இரண்டு ஆண்டுகள் பணி புரிந்து உங்கள் PF கணக்குகளை இணைத்திருந்தால், உங்களின் மொத்த அனுபவம் ஆறு வருடங்களாகக் கணக்கிடப்படும்.
இருப்பினும், உங்கள் பிஎஃப் கணக்குகளை நீங்கள் இணைக்கவில்லை என்றால், ஒவ்வொரு நிறுவனத்தின் காலமும் தனித்தனியாகக் கருதப்படும். உங்கள் பிஎஃப் கணக்குகளை இணைக்காமல் பணத்தை எடுக்கும் போது, ஒவ்வொரு நிறுவனத்தின் இரண்டு ஆண்டுக் காலமும் தனித்தனியாகக் கருதப்படும். இதன் விளைவாக ஒவ்வொன்றிற்கும் 10 சதவீதம் டிடிஎஸ் வரி விதிக்கப்படும்.
மேலும் படிக்க
பென்சன் பணம் இனி உடனே கிடைக்கும்: மாநில அரசு புதிய நடவடிக்கை!
பழைய பென்சன் திட்டம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள்!
Share your comments