1. Blogs

PF வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா? யாருக்கும் தெரியாத திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Is there such a facility for PF customers?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) கீழ், PF கணக்கு வைத்திருப்போருக்கு வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல் இன்னும் பிற வசதிகளும், பலன்களும் உள்ளன. அவ்வகையில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் PF கணக்குதாரர்களுக்கு கிடைக்கும் காப்பீடு பற்றி உங்களுக்கு தெரியுமா? இல்லையெனில் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

தொழிலாளர் டெபாசிட் காப்பீடு திட்டம் (Employee Deposit Insurance Scheme)

PF கணக்குதாரர்களுக்கு தொழிலாளர் டெபாசிட் காப்பீடு திட்டம் (Employee Deposit Linked Insurance Scheme) கீழ் 7 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்குகிறது EPFO நிறுவனம். இந்த இன்சூரன்ஸ் வசதிக்கு PF கணக்குதாரர் கூடுதலாக எந்தவொரு கட்டணமோ, பிரீமியத் தொகையோ செலுத்த தேவையில்லை. அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவருக்குமே இந்த இன்சூரன்ஸ் கிடைக்கிறது. இதன்படி, PF கணக்குதாரர் இறந்துவிட்டால் நாமினிக்கு 7 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

PF கணக்குதாரர் நோய் பாதிப்பால் இறந்தாலோ, விபத்தால் இறந்தாலோ மற்றும் இயற்கையாகவே மரணம் எய்தினாலோ அவரின் நாமினிகளுக்கு 7 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். இந்த இன்சூரன்ஸ் பலன் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட PF கணக்குதாரர் கூடுதலாக எந்தவொரு பிரீமியத் தொகையோ அல்லது வேறு கட்டணங்களோ செலுத்த தேவையில்லை.

சம்பந்தப்பட்ட PF கணக்குதாரருக்கு நாமினிகளே இல்லை எனில் அவரது கணவன்/மனைவி, திருமணமாகாத மகள்கள், வயது வராத மகன்கள் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க

தொழில் தொடங்க விருப்பமா? மானியத்துடன் உதவும் அரசின் திட்டங்கள்!

பென்சன் நிலுவைத்தொகையை விரைந்து வழங்கிட பிரதமருக்கு கோரிக்கை!

English Summary: Is there such a facility for PF customers? No one knows the scheme

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.