இன்று (ஜனவரி 1) முதல் 2023ஆம் புத்தாண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஆகிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயனாளிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
சிறு சேமிப்பு திட்டங்கள் (Small Savings Scheme)
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் திருத்தப்படும். இந்நிலையில், இன்று (ஜனவரி 1) முதல் குறிப்பிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மட்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி உயர்வு (Interest Hike)
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்களுக்கு வட்டி விகிதம் 1.1% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய வட்டி
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கு வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத வருமான திட்டத்துக்கு வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.2% வட்டி கிடைக்கும்.
ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு
1 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.6%, 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.8%, 3 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.9%, 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 7% என வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற திட்டங்களுக்கு
சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகிய திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.
மேலும் படிக்க
இந்தியாவில் நுழைந்தது ஆபத்தான XBB.1.5 வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
Share your comments