எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LIC Housing Finance) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 23) முதல் வட்டி விகிதம் உயர்வு அமலுக்கு வந்தது.
வட்டி விகிதம் (Interest Rate)
ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.40% ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதனால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வது மட்டுமல்லாமல் ஏற்கெனவே வீட்டுக் கடன் EMI செலுத்தி வருவோருக்கு EMI தொகையும் உயரும். எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் வீட்டுக் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் 15.80% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LIC Housing Finance)
தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.05% வட்டி விதிக்கிறது. 50 லட்சம் ரூபாய்க்கு மேல் 2 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.25% வட்டி விதிக்கிறது. இது சிபில் ஸ்கோர் 700க்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே.
சிபில் ஸ்கோர் 600 முதல் 699 வரை இருந்தால் 50 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.30% வட்டியும், 2 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.50% வட்டியும் விதிக்கப்படும்.
சிபில் ஸ்கோர் 600க்கு கீழே இருந்தால் 50 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.75% வட்டியும், ஒரு கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.90% வட்டியும் விதிக்கப்படும்.
மேலும் படிக்க
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: எந்த மாநிலத்தில் தெரியுமா?
தங்கப் பத்திரங்கள் இன்று முதல் விற்பனை: முதலீடு செய்தால் நல்ல இலாபம்!
Share your comments