பொதுவாக முதலீடு செய்பவர்களின் மனநிலையானது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவது பற்றியே இருக்கும். முதலில் நீங்கள் உணரவேண்டியது ஒன்றுதான். குறைந்த முதலீட்டில் நீங்கள்எ திர்பார்த்த தொகை கிடைக்கவில்லை என்றாலும் உங்கள் முதலீடுகள் வீணாக போவதில்லை.
எல்ஐசி முதலீடு (LIC Investment)
கடந்த ஓராண்டாகவே சந்தை அபாயங்களுக்கு மத்தியில் சிக்கி முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளைப் பற்றி யோசிக்கவே மறுக்கின்றனர். பெரும்பாலான முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் சிக்கி பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அதனால் நீண்டகால முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்வது ஒரு நல்லத் தேர்வாக இருக்கும். அதிலும் LIC மியூச்சுவல்ஃபண்ட் நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட பழைமையான LIC MF Government Securities Fund கடந்த 5 வருடத்தில் 6% மேல்ஆண்டுவருமானத்தைஅளித்துவருகிறது.
இந்த ஃபண்டானது சந்தை அபாயங்கள் குறைந்த நீண்டகால முதலீட்டாளர்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 500 அதிகபட்சம் ரூ.1000 ஆகும். இந்த ஃபண்டிற்கு லாக்-இன்காலம் ஏதுமில்லை. ஆனால் 30 நாட்களுக்குமுன் இந்தஃபண்டிலிருந்து வெளியேறினால் 0.25% வெளியேற்றக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
Disclaimer: மியூச்சுவல்ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுயவிருப்பத்தின்பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
PF பயனர்கள் கவனத்திற்கு: பென்சன் தொடர்பான விதிமுறைகள் இதோ!
புதுசா முதலீடு செய்பவரா நீங்கள்? எதுல முதலீடு பண்ணா அதிக லாபம் வரும்!
Share your comments