1. Blogs

வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் LIC-யின் சூப்பர் பாலிசி!

R. Balakrishnan
R. Balakrishnan
LIC - Single Premium

LIC நிறுவனத்தின் இந்த பாலிசி வாங்கினால் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். நீங்கள் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும்.

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் உதவியாக இருக்கும். அதற்கு எல்ஐசி (LIC) ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

வீட்டுக் கடனுக்கு சலுகை அறிவிப்பு: மூன்று ஜாக்பாட்!

ஜீவன் அக்‌ஷய் பாலிசி திட்டம்

நீங்கள் ஓய்வு பெறும் திட்டம் இருந்தாலோ அல்லது நிதி நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ விரும்பினாலோ எல்ஐசி அதற்கு உதவுகிறது. ஓய்வுக் காலத்தில் சுகமான வாழ்க்கைக்காக எல்ஐசி செயல்படுத்தி வரும் திட்டம்தான் ஜீவன் அக்‌ஷய் பாலிசி திட்டம். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் (Single Premium) செலுத்தினால் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வரையில் பென்சன் கிடைக்கும்.

நீங்கள் ஒரே பிரீமியமாக ரூ.10.18 லட்சம் செலுத்த வேண்டும். அப்போது உங்களுக்கு வருடத்துக்கு ரூ.61,250 பென்சன் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் 4,946 ரூபாய். ஒருவேளை நீங்கள் விரும்பினால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ பென்சன் வாங்கிக் கொள்ளலாம். 3 மாதமாக இருந்தால் 14,925 ரூபாயும், 6 மாதமாக இருந்தால் 30,125 ரூபாயும் பென்சனாகக் கிடைக்கும். 30 வயது 85 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்த பாலிசியை வாங்கலாம்.

மேலும் படிக்க

தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி எதுவென அறிந்து கொள்ளுங்கள்!

English Summary: LIC's Super Policy for Lifetime Pension! Published on: 20 August 2021, 07:25 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.