1. Blogs

பக்கோடாவுடன் மொறு மொறு பல்லி- பகீர் ரிப்போர்ட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Lizard with Baguette - Pakir Report!
Credit : Dinamalar

நெல்லையில், பிரபல இனிப்பகத்தில் இருந்து வாங்கிய பக்கோடாவுடன், நன்கு மொறுமொறுவென வறுபட்ட பல்லி கிடந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரபல இனிப்பகம்

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே தெற்கு பஜாரில் ஸ்ரீராம் லாலா சுவீட்ஸ் என்ற இனிப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பக்கோடா வாங்கிச் சென்றார். வீட்டில், பக்கோடாவைப் பிரித்து ஆசையுடன் சாப்பிட முயன்ற அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

எண்ணெயில் பொறித்த பல்லி

பக்கோடாவைப் பிரித்துப் பாத்திரத்தில் கொட்டியபோது, எண்ணெயில் நன்கு மொறு மொறுவெனப் பொறிந்த நிலையில் பல்லி (Lizard) ஒன்று கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், உடனடியாகச் சென்னை உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்தார்.

அதிரடி ஆய்வு

இதன் அடிப்படையில், நெல்லை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசி தீபா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் உடனடியாக அந்தக் குறிப்பிட்ட இனிப்பகத்தில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது கடையில் உணவு பண்டங்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல், தொடர்ந்து பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டிருந்த குலோப் ஜாம் உள்ளிட்ட தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

எச்சரிக்கை (Warning)

பின்னர் பிளாஸ்டிக் டப்பாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பண்டங்களுக்கு தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை அச்சிடுமாறு கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மாதிரிகள் ஆய்வு (Study of samples)

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரி உள்ளிட்ட தின்பண்டங்களை எடுத்து ஆய்வுக்காகத் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுகள் தெரிவதற்கு 20 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கடையை 24 மணி நேரம் அடைத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இலவச ரயில் டிக்கெட் வேண்டுமா?உடனே இதைச் செய்யுங்க!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Lizard with Baguette - Pakir Report! Published on: 27 October 2021, 08:10 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.