1. செய்திகள்

71 லிட்டர் பெட்ரோல் Free! விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
71 liters of petrol Free! Details inside!

Credit : Business Standard

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த Credit Cardக்கு சலுகையாக 71 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தாங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, எண்ணெய் நிறுவனங்கள் இத்தகைய சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் (Indian Oil) வாடிக்கையாளர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதிரடி சலுகை (Action offer)

அதன்படி இந்தியன் ஆயில் (Indian Oil) வாடிக்கையாளர்களுக்கு 71 லட்டர் பெட்ரோல், டீசலை (Petrol-Diesel Price) இலவசமாக வழங்குகிறது. இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகைகளைப் பெற வேண்டும் என்றால் அவர்களிடம் சிட்டி பேங்க் கிரெட்டிட் கார்டு (City bank credit card)இருக்க வேண்டியது அவசியம்.

4 டர்போ பாயிண்ட்கள்

இந்நிலையில் சிட்டி பேங்கில் ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டும் இல்லாமல், புதியதாகக் கார்டை விண்ணப்பித்து பெறுபவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளன. மேலும் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் சிட்டி பேங்க் பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி 150 ரூபாய்க்கும் அதிகமாகப் பெட்ரோல் போடும் போது 4 டர்போ பாயிண்ட்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு 1 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

71 லிட்டர் பெட்ரோல்

வாடிக்கையாளர்கள் இந்த டர்போ பாயிண்ட்களை தேவைப்படும் போது ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம். தொடர்ந்து ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் இந்தச் சலுகை மூலம் அதிகபட்சம் 71 லிட்டர் வாங்கக் கூடிய அளவிலான பணத்தை டர்போ பாயிண்ட்களாகப் பெற முடியும்.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: 71 liters of petrol Free! Details inside!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.