இப்ஸா (Ibiza) என்கிற ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு இலவசமாக தங்குவதற்கான வாய்ப்புகளை அளிக்கின்றனர். இருப்பினும் இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒத்துக்கொண்டால், உங்கள் இரவை இந்த சொகுசு ஓட்டல் அறையில் கழிக்கலாம்.
திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் பார்க்கும்போது, வெளிநாடுகளில் உள்ள ஆரம்பர ஹோட்டல்கள் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கும். அப்படியொரு, ஹோட்டலில் நாம் தங்கினால் எப்படியிருக்கும் என கனவு காண்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான்.
கண்ணாடி அறை
இந்த சொகுசு ஹோட்டலின் ஆடம்பர அறையில் நீங்கள் இலவசமாகத் தங்கலாம். ஆனால் ஒரு நிபந்தனை. அது என்னவென்றால், நீங்கள் தங்கும் இந்த அறை முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது.
இலவசமாக தங்கலாம்
ஸ்பானிஷில் உள்ள தீவான ஐபிசாவில் உள்ளது இந்த ஹோட்டல். பெரும் பணக்காரர்களுக்காகவே பெரிய ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்ஸா எனும் இந்த ஹோட்டல் அறையில் ஒரு இரவு நீங்கள் இலவசமாக தங்கலாம்.
வேடிக்கை பார்க்கலாம்
ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது. இந்த அறை முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆனது. அதன் நான்கு சுவர்களும் கண்ணாடியால் ஆனது. மேலும் இந்த அறை லாபி என அழைக்கப்படும் ஹோட்டலின் பொது அறையில் அமைந்துள்ளது.நாம் உள்ளுக்குள் என்ன செய்தாலும் அதை அனைவரும் பார்க்க முடியும். கண்ணாடி சுவர் வழியாக வெளியில் உள்ளவர்கள் நம்மை வேடிக்கை பார்க்க முடியும்.
இதனால் அந்த அறையில் நீங்கள் படுத்திருப்பதை ஹோட்டலுக்கு வருபவர்கள், செல்பவர்களில் துவங்கி அங்கு விழா, பார்டி செய்பவர்கள் என அனைவரும் உங்களை பார்க்க முடியும். அதே போல உங்களாலும் கூட வெளியில் என்ன நடக்கிறது, என்ன விழா நடக்கிறது என்பதை பார்க்க முடியும்.
சில நேரங்களில் அங்கு இரவு முழுவதும் கூட பார்ட்டி நடக்கும் என்பதால் உங்களை வெளியில் உள்ளவர்கள் இரவு முழுவதும் கூட பார்த்துக்கொண்டே இருக்க முடியும். இதற்கெல்லாம் சரி என்பவர்கள் அந்த ஹோட்டலின் அந்த சிறப்பு அறையில் தங்களது இனிமையான இரவை கழிக்கலாம்.
ஜோடிக்கு அல்ல
அந்த அறையில் வசதியான படுக்கை உள்ளது. தேநீர் சாப்பிட மேசை,டிவி ஆகியவையும் உள்ளது. ஆனால் ஜோடியாக செல்பவர்களுக்கு இந்த அறை ஏற்றது கிடையாது. இந்த ஹோட்டல் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க...
Share your comments