கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சமையல் பாத்திரம் ஒன்றைப் படகாகப் பயன்படுத்தி இளம் காதல் ஜோடி திருமண மண்டபத்திற்குச் சென்று திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ரெட் அலர்ட் (Red Alert)
கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மற்றும் திரிச்சூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
35க்கும் மேற்பட்டோர் பலி (More than 35 killed)
கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35க்கும் மேற்பட்டார் பலியாகி உள்ளனர். பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், சேற்றில் புதைந்தும் போயுள்ளன.
பலப் பகுதிகளில் மக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பல சிக்கல்களைக் கடந்து, ஓர் இளம் காதல் ஜோடியின் திருமணம் நடைபெற்றது.
பணியிடத்தில் காதல் (Love in the workplace)
கேரளாவின் செங்கனூர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் ஒன்றாக பணியாற்றி வருபவர்கள் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா. பணியிடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு ஐஸ்வர்யா வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், கடந்த 5ந்தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். எனினும், இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர். ஆனால், ஆகாஷ் வசித்த திருமண மண்டபம் கிடைக்காததால், தாளவாடி பகுதியில் ஒரு கோவிலில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
சோதனையாக மழை (Rain as a test)
ஆனால், சோதனை மழை வடிவில் வந்தது. பல்வேறு இடங்களை வெள்ள நீர் சூழ்ந்ததால், இவர்களது திருமணம் நடக்குமா? அல்லது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்தது.
சுகாதாரப் பணியாளர்களான மணமக்கள் இருவருக்கும், கொரோனா பணியால், மீண்டும் விடுறை கிடைப்பது சிக்கல் என்பதால், திட்டமிட்டபடி திருமணம் செய்துகொள்ள முன்வந்தனர்.
படகாக மாறிய பாத்திரம்
இதனை தொடர்ந்து, தாளவடி வந்த தம்பதியை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய கோவிலுக்கு, பெரிய அலுமினியத்தில் செய்யப்பட்ட சமையல் பாத்திரம் ஒன்று தயாராக இருந்தது. அதனைப் படகாகப் பயன்படுத்தி மணமக்கள் பயணம் செய்து சென்று திருமணம் செய்துகொண்டனர்.
கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போதும், வீடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்பதற்கும் மற்றும் பயணம் செய்வதற்கும் இதேப்போன்று, சமையல் பாத்திரம் பயன்பட்டதுக் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments