கேரளாவில் கொரோனா பாதித்த மணமகன் ஒருவருக்கு நிச்சயக்கப்பட்ட நாளில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா வார்டில் திருமணம் நடத்தப்பட்டது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கேரள மாநிலம் ஆலப்புலாவை சேர்ந்தவர் சரத் மோகனன். இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணம் நிச்சயம் (Marriage Engagement)
இவருக்கும் அபிராமி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. இதற்காகக் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சவுதியிலிருந்து தனது சொந்த ஊரான ஆலப்புலாவிற்கு வந்தார்.
கொரோனா பாதிப்பு (Corona vulnerability)
இதனையடுத்து மணமகன் சரத் தனது வீட்டிலேயே தன்னைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், மணமகன் சரத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருடைய தாயாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்தன.
மருத்துவமனை அனுமதி (Admitted to Hospital)
இதையடுத்து, 25ஆம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர். இருப்பினும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தி முடிக்க முடிவு செய்த இரு வீட்டாரும் மணமகன் அனுமதிக்கப்பட்டிருக்கு வார்டில் வைத்தே திருமணத்தை நடத்த மருத்துவமணை நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். அதன்படி இந்த நிகழ்விற்காக மட்டும் தனி அறை ஒன்றை ஒதுக்கி அதிகாரிகள் வழங்கினர்.
திட்டமிட்டபடித் திருமணம் (Marriage as planned)
எனவே திட்டமிட்ட நாளில் மணமகன் சரத், கொரோனா பாதுகாப்பு உடையணிந்து வந்த மணமகள் அபிராமியின் கழுத்தில் தாலி கட்டினார். திருமண நிகழ்வின்போது இரு வீட்டாரின் தாய் தந்தையர்கள் மட்டும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப் பட்டிருந்தனர். உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வாழ்த்துக்கள் (Wishes)
திருமணம் முடித்த தம்பதியினருக்கு மருத்துவமனையின் ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திட்டமிட்டபடியே திருமணத்தை நடத்தி முடிக்க அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு மணமகனின் உறவினர்களும், மணமகள் அபிராமியும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Lack of oxygen)
கொரோனாத் தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் குறிப்பாக டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், நோயாளிகளின் உறவினர், பரிதவித்துக்கொண்டிருக்கிறது.
இந்த வேளையில், கொரோனான பாதிப்பு சற்று அதிகம் உள்ள கேரளாவில் கொரோனா நோயாளித் திட்டமிட்டபடித் தனது திருமணத்தை நடத்திக்கொண்டது மற்றவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
Share your comments