மே தினம் கொண்டாடப்பட முக்கிய காரணம், 18 மற்றும் 19 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சி தான் காரணம். வளர்ந்த நாடுகள் மற்றும் ஓரளவு வளர்ந்த நாடுகளில் வேலையின் நேரம் என்பது அதிகமாக்கப்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அனைவரும் 15 முதல் 18 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். உலகின் பல நாடுகளிலும் இதே சூழல் தான் பெரும்பாலும் நிகழ்ந்தது. மிக முக்கியமாக பேசப்படுவது இங்கிலாந்து சாசனம் தான். இதில், சில முக்கிய கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தபட்டது. மேலும் 10 மணி நேரமாக வேலை இருக்க வேண்டும் என்பது தான். சிகாகோ நகரில் மாபெரும் எழுச்சி போராட்டமும் நடைபெற்றது.
தொழிலாளர் தினம் (Labors day)
பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலும் நாடுகளிலும் போராட்டம் வலுப் பெற்றது. வேலை சுமை தாங்க முடியாத தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். இதில் பலருக்கு தோல்வி தான் கிடைத்தது என்றாலும் உலக நாடுகளில் என்னவென்ன நடக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளவும் பிற உலக நாடுகளில் தொழிலாளர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தது என்றே கூறலாம்.
சுமார் 1830-களில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள் 1890 களில் தான் சற்று குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், 1889 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் தான். இந்த கூட்டத்தில், 18 நாடுகள் கொண்ட 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர். இது அப்போது மிகப் பெரிய கூட்டமாக பார்க்கப்பட்ட்டது.
இக்கூட்டத்தில், 8 மணி நேர போராட்டத்தை வலியுறுத்த போவதென, பல முடிவுகளை எடுத்தனர். 1890 ஆம் ஆண்டு, மே 1 ஆம் தேதி உலகளவில் தொழிலாளர்களுக்கான இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அறிவிக்கபட்டது. இதன்மூலம் தான் ஆண்டு தோறும் நாம், மே 1 அன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தான் தொழிலாளர் தினம் கொண்டாப்பட்டது.
இந்த உலகில் அனைத்தும் இயங்க தொழிலாளர்கள் மிக முக்கியம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. அனைவருக்கும் உலகத் தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துகள்!
மேலும் படிக்க
ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை: நோய்கள் இலவசம்!
ONGC வேலைவாய்ப்பு: 3,614 பணியிடங்களுக்கு உடனே விண்ண்ப்பியுங்கள்!
Share your comments